2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மத்தியஸ்தர் சபையினால் மட்டு.மாநகர சபை பிரதேசத்தில் 4000 வழக்குகளுக்கு தீர்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் மாத்திரம் கடந்த மூன்று வருடங்களில் 4000 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மத்தியஸ்தர் சபை தலைவர் கே.கணேசு தெரிவித்தார்.

நீதி அமைச்சின் அனுசரணையுடன் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்படும் மத்தியஸ்தர் சபைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் திறம்பட செயற்பட்டு வருகின்றன.

நீதி மன்றங்களுக்கு சென்று நீண்டகாலம் தாமதிக்கப்படும் வழக்குகள் குறிப்பிட்டசில வாரங்களுக்குள் தீர்வு காணப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

காணி மற்றும் கொடுக்கல் வாங்கல்கள், குடும்ப பிரச்சினைகள்,  வீட்டுத்தகராறுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வுகள் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரு தரப்பினரிடையேயும் இணக்கப்பாட்டை உண்டுபண்ணுவதன் மூலம் வழக்குகள் தீர்க்கப்படுவதால் அதிகமான மக்கள் மத்தியஸ்தர் சபையை நாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .