2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

சூழலுக்கு பாதிப்பேற்படுத்தும் வாகனங்களை கண்டறியும் சோதனைகள்: 53 வாகனங்களுக்கு காலக்கெடு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காணப்படும் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கையினை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமையகம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பில் ஆரம்பித்தது.

இதன்போது 53 வாகனங்களின் வாகன வரிப்பத்திரங்கள் போக்குவரத்துத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைமையக மோட்டார் வாகனப் பரிசோதகர் கே.மணிவண்ணன் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின்போது, வாகனங்களில் புகைப் பரீட்சித்தல், சமிக்ஞை விளக்குகள், துருப்பிடித்த வாகனங்கள், இருக்கைகளின் குறைபாடுகள், போன்றவை கவனத்தில்கொள்ளப்பட்டன.

குறைபாடுகள் உள்ள வாகனங்களின் வாகன வரிப்பத்திரம் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு வாரங்களில் குறைபாடுகள் சீர் செய்யப்பட்டு மோட்டார் வாகனத்திணைக்கள அலுவலகத்தில் காண்பிக்கப்பட வேண்டும் அல்லது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சாரதிகள் வாகன உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .