2026 மே 04, திங்கட்கிழமை

கிழக்கு பல்கலையின் மீள்கட்டுமான பணிகளுக்காக ரூ.80 மில்லியன் செலவிடப்படவுள்ளது: உபவேந்தர்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மீள் கட்டுமானப் பணிகளுக்கு 80 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும், இதில் முக்கியமாக பல்கலைக்கழகத்தின் இருபக்க சுற்று மதில்களை நவீன முறையில் அமைத்தலும், புதிய நுழைவாயில் அமைத்தலும் அமைந்திருக்கும் எனவும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணர் கோபிந்தராஜா தெரிவித்தார்.

இந்த மீள் கட்டுமான வேலைகளில் பிரதான மண்டபத்தினை நவீனமுறையில் புனரமைத்தல், மாணவர்களின் தேவைகள் சார் அபிவிருத்திகள், விடுதிகளின் திருத்தங்கள், செனற் கட்டடத்தின் திருத்தங்கள் எனப் பலவும் அடங்குகின்றன.

அத்துடன் சிற்றுண்டிசாலை புனரமைத்தல், பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கட்டங்களும் இதன்போது திருத்தப்பட்டு பல்கலைக்கழகத்தினை புதுப்பொலிவுபெறச் செய்வதற்கான வேலைகளில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் கோபிந்தராஜா தெரிவித்தார்.

இதே நேரம் சுற்றுமதில் அமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளதுடன், மொத்தமாக 80 மில்லியன் வரையில் இந்த மீள் கட்டுமான திட்டத்திற்கு செலவிட் திட்டமிடப்பட்டுள்ளபோதும் 100 மில்லியன் வரையில் செல்லாம் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்குப்பல்கலைக்கழத்தின் உபவேந்தர் பதவிக்கு நீண்டகாலமாக யாரும் நிமமிக்கப்படாதிருந்த நிலையில் அண்மையில் புதிய உபவேந்தர் நியமனம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .