2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

மட்டக்களப்பு விமான நிலைய புனரமைக்கென 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், ஜிப்ரான்)

மட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புக்கென 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து விமானசேவைகள் பொறியியல்துறை இந்த விமான நிலைய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

விமான நிலையத்தினை புனரமைத்து தருமாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன இந்த புனரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு விமான தளத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அழைப்பையேற்ற சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன, சிறுவர் அபிவிருத்தி மகளீpர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் விமானசேவைகள் நிலைய பிரதிப் பணிப்பாளர் கமல் ரத்வத்தை, சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபேரூ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.சார்ள்ஸ் உட்பட நகர அபிவிருத்தி அதிகாரசபை, விமானசேவைகள் பொறியியல்துறை, மட்டக்களப்பு விமானப்படைத்தள இணைப்பாளர், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது விமானப்படைத்தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இந்த புனரமைப்பு பணிகள் நிறைவுபெறும் பட்சத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேரடியாக மட்டக்களப்புக்கு வரக்கூடிய வசதிகள் ஏற்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிந்தனையில் உருவான இந்த திட்டம் மூலம் தமிழ் மக்கள் சிறந்த பயனை அடையமுடியும் என்பதுடன் அவருக்கு அனைவரும் நன்றிக்கடன் உள்ள மக்களாக இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .