2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

பெரும்போக விவசாயச் செய்கை செப்டெம்பர் 25 முதல் ஆரம்பிக்கலாம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக விவசாயச் செய்கையினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் அரம்பிக்கலாம் என வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பெரும்போக விசாயச் செய்கை ஆரம்பக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுணதீவுப் பிரதேசத்தின் உன்னிச்சை நீர்ப்பாசணம், சிறு நீர்ப்பாசணம் மற்றும் மானாவாரி வயல்களில் பெரும் போக விவசாயச் செய்கையினை மேற்கொள்வது தொடர்பான ஆரம்பக் கூட்டம் நேற்று வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தலைiயில் இடம்பெற்றது.

இதன்போது 2012ஆம் ஆண்டு பெரும் போக விவசாயச் செய்கையினை மேற்கொள்வது தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

விதைக்கப்படும் நெல்லினங்கள் மூன்று மாதம், மூன்றரை மாதம், நானகு மாதம் எனவும் விவசாய வேலை ஆரம்பம் செப்டெம்பர் 1 ஆம் திகதி எனவும் தீர்மானிக்கபட்டது. இதேவேளை, விதைப்பு ஆரம்பம் செப்டெம்பர் 25 எனவும் விதைப்பு முடிவு ஒக்டோபர் 25 எனவும் காப்புறுதி செய்ய வேண்டிய இறுதித் திகதி ஒக்டோபர் 25 எனவும் அறுவடை கொணடு செல்லும் இறுதித் திகதி 2013 ஜனவரி 28 எனவும் இறுதி நீர் விநியோகம் 2013 ஜனவரி 25 எனவும் வேலி அமைக்கும் இறுதி திகதி 2012.9.25 எனவும் கால்நடைகளை அகற்றும் இறுதி 2012.09.20 எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வவுணதீவுப் பிரதேச செயலாளர் வெ.தவராசா, நீர்ப்பாசண பிரதிப் பணிப்பாளர் மோகனதாஸ் நீர்ப்பாசன பொறியியலாளர்கள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், காப்புறுதி கூட்டுத்தாபன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .