2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. மத்தி கல்வி வலயத்தில் 30ஆம் பரீட்சைகள் ஆரம்பம்

Super User   / 2013 மார்ச் 28 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன், ஆர்.அனுருத்தன்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குப்பட்ட பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சை எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் பாத்திமா நசீறா மேற்கொண்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை முதலாம் தவணைக்கான பரீட்சை ஆரம்பமான நிலையில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை மாணவர்கள் பார்வையிடுவதற்காக முதலாம் தவணைப் பரீட்சை கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் ஒத்திவைத்தது. இதனால் நேற்று புதன்கிழமையும் இன்று வியாழக்கிழமையும் முதலாம் தவணை பரீட்சை நடைபெறவில்லை.

எவ்வாறாயினும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குப்பட்ட பாடசாலைகளில் திட்டமிட்ட படி ஏற்னவே பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்ட நேர அட்டவணைக்கேற்ப பரீட்சைகள் நடைபெறும் என பிரதி கல்வி பணிப்பாளர் பாத்திமா நசீறா அறிவித்தார்.

இதனால் எதிர்வரும் சனிக்கிழமை முதலாம் தவணை பரீட்சை நடைபெறும் என மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .