2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 41 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

Super User   / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 41 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஒகஸ்ட் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி டி.ஏ. மனாப் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போதே இந்த சந்தேக நபர்கள் 41 பேரையும் ஒகஸ்ட் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிபதி மனாப் உத்தரவிட்டார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டார்கள் என்ற குற்றஞ்சாட்டில் கடந்த மாதம் 17ஆம் கைது இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்களும் அடங்குகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .