2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

அரசியல் கட்சியின் வாகனம் மோதியதில் 78 வயது மூதாட்டி பலி

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

நேற்று திங்கட்கிழமை மாலை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி எனுமிடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 78 வயது மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பலியானவர் கிரான் கடற்கரை வீதியைச் சேர்ந்த முத்து செல்லம்மா என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஏறாவூர் வைத்தியசாலையில் உள்ள கடமைத் தாதி உத்தியோகத்தர் றுமைஸ் தெரிவித்தார்.

மூதாட்டியை மோதிய வாகனம் மாகாண சபைக்காகப் போட்டியிடும் அரசில் கட்சியொன்றின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஒருவருடையது என்று கூறப்படுகின்றது.

மூதாட்டியை மோதிய அந்த வாகனத்தில் இருந்தவர்களே சடலத்தை ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வந்து சேர்ப்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் மாவட்ட நீதிபதியின் உத்தரவு கிடைத்ததும் இன்று செவ்வாய்க்கிழமை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரண விசாரணை இடம்பெறும் என்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .