2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 122ஆவது பிறந்த தின நிகழ்வு

A.P.Mathan   / 2014 மே 04 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 122ஆவது பிறந்த தின நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகள் மாநகர ஆணையாளர் மா. உதயகுமார் தலைமையில் நீதிமன்றத்திற்கு முன்பாக அமைந்துள்ள நீருற்றுப் பூங்கா  வளாகத்தில் நடைபெற்றன.

மாநகர ஆணையாளர், சுவாமி விபுலானந்தர் நாற்றாண்டு விழா சபைத் தலைவர் பேராசிரியர் மா. செல்வராசா, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. தவராஜா, மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், சிவில் சமுகத் தலைவர் எஸ். மாமாங்கராஜா அகியோர் நீருற்றுப் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவிகளால் 'ஈசன் உவர்க்கும் மலர்கள்' எனும் அடியில் தொடரும் பாட்டு பாடப்பட்டது.

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே. பிரேம்குமார், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அதிபர் சி.எஸ்.மாசிலாமணி, வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை அதிபர் கே.கனகசிங்கம், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபைச் செயலாளர் எஸ். ஜெயராஜா, காசுபதி நடராஜா உடபட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X