2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

வவுனதீவில் ட்ரக்டர் கவிழ்ந்து 17 பேர் படுகாயம்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு, வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாமுனைப் பகுதியில் மக்கள் சென்ற ட்ரக்டர் கவிழ்ந்ததில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் காந்தி நகரில் இருந்து கன்னன்குடா நோக்கிச்சென்ற ட்ரக்டரே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக வவுனதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 17 பேர் படுகாயமடைந்து தாண்டியடி கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக 10 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன் ஏனையவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்த அனைவரும் காந்த நகரை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .