2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கடலாமை விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு 20ஆயிரம் ரூபா அபராதம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                  (ரி.லோஹித்)
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடலாமை விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தலா 20ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்பு பிரிவினரால் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் அப்துல்லா முன் ஆஜர் படுத்தப்பட்ட போதே இவ் அபராதத்தொகை விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் லால் செனவிரட்னவின் ஆலோசனையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கிங்ஸ்லி குணரெட்னவின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஜே.எம்.ஜயசுந்தர தலைமையிலான பொலிஸ் குழவினர் இவர்களை கைது செய்திருந்தனர்.

கடலில் மிகவும் அருகிவரும் உயிரினமாகவுள்ள இந்த கடலாமைகள் பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றை பிடித்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரி உட்பட மூவர் அடங்கிய குழுவினரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .