2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

'பெண்கள் தொடர்பான வன்முறைகள் 282 பதிவாகியுள்ளன'

Kogilavani   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பெண்கள் தொடர்பான வனமுறை சம்பவங்கள்; 282 பதிவாகியுள்ளதாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எஸ்.தட்சனாமூர்த்தி தெரிவித்தார்.

'பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்' என்ற தொனிப்பொருளில்  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்படி தகவலைத் தெரிவித்தார்.

'எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சென்ற 282 பேரில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 121 பேர், சிறுவர் துஷ்பிரயோகங்கள் 19, உறவினர்களால் பாதிக்கப்பட்டவர்கள்  23 பேர், பாலியவல்;லுறவு 10, தற்கொலை முயற்சி 19, ஏனையவை 90 உள்ளடங்குகின்றனர். இந்த விபரீதங்களை தடுப்பதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும'; என்றும் கூறினார்.

சமாதானம் வீடுகளில் இருந்து உலகத்திற்கு வன்முறையற்ற சமூகத்தை வளர்ப்போம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்திற்கான பெண்கள் கூட்டமைப்பும் வாழைச்சேனை அதார வைத்தியசாலையின் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கும் மையம் என்பன இணைந்து இச் செயலமர்வை நடாத்தியது.

இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் பயன்தரக்கூடிய மரக் கன்றுகள் நடப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்திற்கான பெண்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களால் பெண்களுக்கெதிராக நடைபெறும் வன்முறைகளை பாடல்கள் மூலமும் வெளிக்காட்டப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .