2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பில் ஊர்வலம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஸனினால் பல்வேறு வைபவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு அங்கமாக சுவாமி விவேகானந்தரின் நினைவாக ஊர்வலமும் மற்றும் ஒன்று கூடலும் இன்று காலை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சுவாமி இராமகிருஷ்ணமிஸன் மண்டபத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம் சிவானந்தா வித்தியாலய மண்டபம் வரை நடைபெற்றது.

இராமகிருஷ்ண மிஸன் மட்டக்களப்பு கிளையின் தலைவர் சுவாமி கபாலனந்த ஜீ தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் இந்திய ராமகிருஸ்ணமிஷன் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ், மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிர்வாகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிரேம்குமார் உட்பட அதிதிகள் ராம கிருஸ்ணமிஸன் முக்கியஸ்தர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது சுவாமி விவேகானந்தரை பற்றிய நினைவுப் பேருரைகள் நடாத்தப்பட்டதுன் அவரின் உருவப்படத்திற்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .