2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

மட்டு மாவட்டத்தின் 40 இடங்களில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 8 மணி நேர மின் வெட்டு

Super User   / 2012 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 40 இடங்களில் எதிர்வரும் ஒகஸ்ட் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை எட்டு மணி நேர மின் வெட்டு இடம் பெறும் என இலங்கை மின்சார சபையின் கல்லடியிலுள்ள மட்டு. மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனால் காவத்தமுனை, ஓட்டமாவடி, வாழைச்சேனை, கறுவாக்கேணி, கிண்ணியடி, சின்னவேம்பு, பாசிக்குடா, கிரான், சந்திவெளி, முறக்கெட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, மரப்பாலம், கரடியனாறு, இராஜபுரம், கித்துல், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, தும்பாலஞ்சோலை, ஐயங்கேணி, மிச்சி நகர், தளவாய், மீராகேணி, சதாம் ஹுசைன் கிராமம், ஹிஸ்புல்லா கிராமம், கொம்மாதுறை, செங்கலடி, களுவங்கேணி, ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை மற்றும் ஊறணி ஆகிய இடங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .