2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

புதையல் தோண்டிய 09 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 30 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரக்காடு பிரதேசத்தில்  புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 09 பேரை சனிக்கிழமை (29) கைதுசெய்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

காரக்காடு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்தாகக் கூறப்படும் 09 பேரை கைதுசெய்த இராணுவத்தினர், கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 08 தமிழர்களும் ஒரு  முஸ்லிமும் உள்ளனர். இவர்கள்  கல்முனை, திருகோணமலை, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X