2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பெரும்போகத்திற்கு 100,000 மெற்றிக்தொன் நெல் கொள்வனவுக்கு ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,ஜவ்பர்கான்


பெரும்போக நெற்செய்கைக்கு ஒரு இலட்சம் மெற்றிக்  தொன் விதை நெல் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட  விவசாயக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் பற்றி ஆராயும் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, விவசாயத் திணைக்களத் தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட  விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆராயப்பட்டன.

விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி டி.வி.ரி.விஜேரத்தின, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட விவசாய திணைக்களப் பணிப்பாளர் வி.உலகநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X