2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 11 பேர் காயம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 21 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதி, மயிலம்பாவெளியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் 11 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து புல்லுமலை நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸும் மூதூரிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் இரு பஸ்களின் சாரதிகள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .