2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் மரணமாக 14 பேரின் இரண்டாவது ஆண்டு நிறைவு

Suganthini Ratnam   / 2011 மே 17 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி  வாழைச்சேனை - பிறைந்துரைச்சேனை அல் இஸ்மா பாலர் பாடசாலை ஏற்பாடு செய்த சுற்றுலாப் பயணத்தில் கண்டியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இடம்பெற்ற விபத்தில் மரணமடைந்த 14 பேரின் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை மாலை  வாழைச்சேனையிலுள்ள பள்ளிவாசல்களில் கத்தமுல் குர்ஆன் வைபவமும் விஷேட துஆப் பிரார்த்தனையும் நடைபெற்றது.  

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி  வாழைச்சேனை - பிறைந்துரைச்சேனை அல் இஸ்மா பாலர் பாடசாலை ஏற்பாடு செய்த சுற்றுலாப் பயணத்தில் கண்டியை நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தபோது மண்ணம்பிட்டி – செவனப்பிட்டி சந்தியில் ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்ததையிட்டு கல்குடா அல் இஸ்மா கலாசார நிலையத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலைத் தொடர்ந்து சகல பள்ளி வாசல்களிலும் விஷேட துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இந்த விபத்தில் ஒரு நிறைமாதக் கர்ப்பிணி, 3 சிறுவர்கள், 4 சிறுமிகள், 2 பாடசாலை மாணவிகள், 5 பெண்கள் மொத்தமாக 14 பேர் மரணமடைந்ததுடன், 18 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .