2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாவனைக்குதவாத 175 கிலோகிராம் கேக்குள் கைப்பற்றப்பட்டன

Kogilavani   / 2014 மே 06 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் மனித பாவனைக்குதவாத 175 கிலோகிராம் கேக்குகளை காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் செவ்வாய்க்கிழமை (6) கைப்பற்றியுள்ளனர்.

வெளியூரில் தயாரிக்கப்பட்டு பொதிசெய்யப்பட்ட கேக் வகைகள் காத்தான்குடியிலுள்ள சில கடைகளுக்கு விற்பணை செய்யப்படுவதாக காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கேக்குகள் கைப்பற்றப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் கே.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் ஆலோசனையுடனும், அவரது வழிகாட்டலுடனும் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.றபீக் மற்றும் பொதுச் சுகாதார கே.ஜெய்சங்கர் ஆகியோர் இந்த கேக் வகைகளை கைப்பற்றி பரிசோதனை செய்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X