2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாடு 2இல்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாடு எதிர்வரும் 2ஆம் திகதி காலை 09 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்; எம்.எம்.அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

இந்த தேசிய மாநாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள்; சந்திப்பு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடியிலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை நடைபெற்றது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'தேசிய அரசியல் நிறுவனமாக நல்லாட்சிக்கான மக்கள் வியாபிக்கப்பட்டதையடுத்து தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு இதுவாகும்.

இதில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மற்றும் ஏனைய அரசியல்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டின் இறுதியில் அரசியல் பிரகடனமொன்றும் வெளியிடப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் புதிய சூறாசபையின் அறிமுகமும் இடம்பெறவுள்ளது. ஏனைய அரசியல் கட்சிகளின் நிர்வாக கட்டமைப்புக்கள் போலல்லாமல் நல்லாட்சிக்காக மக்கள் இயக்கம் ஒரு சூறா ஒழுங்கில் அதன் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது. இந்த அரசியல் இயக்கத்தில் சூறாவுக்கே முக்கியத்துவமும் தீர்மானிக்கின்ற சக்தியும் உள்ளது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு காத்தான்குடி நகர சபையில் இரண்டு உறுப்பினர்கள் உண்டு. அதில் மீளழைத்தல் மூலம் நகர சபையின் அடுத்த பிரதிநிதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இவர்  இந்த தேசிய மாநாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளார்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X