2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மட்டக்களப்பில் மினி சூறாவளி; 20 வீடுகள் சேதம்; ஒருவர் காயம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட 35ஆம் கொலணிப்பகுதியில் இன்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று மாலை திடீரென ஏற்பட்ட இந்த மினி சூறாவளி காரணமாக சில வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் சில வீடுகளில் மரம் வீழ்ந்ததால் சேதமடைந்துள்ளன.

இதன்போது ஒரு வீட்டின் கூரை தூக்கி வீசப்பட்டதால் ரோகினி (36வயது) என்ற பெண் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலைப்பகுதியில் இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இவருக்கு தலையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சர் கு.சுகுணன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்குள் மூன்றாவது தடவையாக இப்பகுதியை மினிசூறாவளி தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0

  • hafeel Tuesday, 09 October 2012 08:29 PM

    இதயல்லோரும் பார்க்கவும் கண்டிப்பாக.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .