2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் மினி சூறாவளி: சுமார் 300 குடும்பங்கள் பாதிப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 29 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா, ஜிப்ரான் )

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட  எல்லைக் கிராமங்களில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாரமத்துவ பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

புதுமுன்மாரிச்சோலை கிராமத்தில் 55 வீடுகளும் சின்னவத்தை கிராமத்தில் 30 வீடுகளும் பாலையடிவடை கிராமத்தில் 49 வீடுகளும் ராணமடு கிராமத்தில் 51 வீடுகளும் மாலையர்கட்டு கிராமத்தில் 55 வீடுகளுமாக மொத்தமாக 240 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு- அம்பாறை எல்லை கிராமமான வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் வீசிய மினி சூறாவளி காரணமாக 157 வீடுகள் சேமடைந்துள்ளதாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் கே.வில்வரத்தினம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இடங்களை போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தயோகஸ்தர் சிவகுமார், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு கிளை அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.

மினிசூறாவளியினால்  இருப்பிடங்களை இழந்த அப்பகுதி மக்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சேத மதிப்பீடுகள் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தயோகஸ்தர் சிவகுமார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .