2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மட்டு. பஸ் விபத்தில் 14 பேர் காயம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                       (ஜதுசன்,எம்.சுக்ரி)


மட்டக்களப்பு,  காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் பஸ் ஒன்று பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் குறைந்தப்பட்சம் 14  பேர்  காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு- கல்முனை வீதியில் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில்  9 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளதாக ஆரையம்பதி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ரமேஸ் தெரிவித்தார்.

இதேவேளை, ஆரையம்பதி வைத்தியசாலையில் 5 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு  வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். (படங்கள்:- எம்.சுக்ரி)




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .