2025 மே 15, வியாழக்கிழமை

ஸ்ரீ சபாரத்தினத்தின் 28ஆவது நினைவு தினம்

Kanagaraj   / 2014 மே 07 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல், தேவஅச்சுதன், எஸ்.சசிக்குமார்


தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மறைந்த தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28ஆவது நினைவு தினம் செவ்வாய்கிழமை (06) மட்டக்களப்பு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் ந.குணசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமரர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கடந்த கால நினைவுகள் பற்றிய நினைவு உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

இந்நிகழ்வில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம்(ஜனா), பி.இந்திரகுமார் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .