2026 மே 04, திங்கட்கிழமை

ஓட்டமாவடியில் 3 கொங்கிறீட் வீதிகளுக்கான வேலைகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 17 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேசசபை பிரிவில் 35 இலட்சம் ரூபா செலவில் 3 கொங்கிறீட் வீதிகளை அமைப்பதற்கான வேலைகள் நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

ஓட்டமாவடி கே.பி.ஹாஜியார் குறுக்கு வீதி வடிகானுடன் கொங்கிறீட் வீதியாக 15 இலட்சம் ரூபா செலவிலும் மாஞ்சோலை பதுரியா நகரில் இளைஞர் கழக குறுக்கு வீதி மற்றும் ஆலையடி வீதிகள்  தலா 10 இலட்சம் ரூபா செலவிலும் கொங்கிறீட் வீதிகளாக அமைக்கப்படவுள்ளன.

ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதேசசபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமிட், சபை உறுப்பினர்களான எல்.ரீ.அஸ்மி, எம்.முஹாஜிரீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .