2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பிரிவில் 3 பாடசாலைகளில் ஆய்வுகூடங்களுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 25 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


ஆயிரம் இடைநிலை பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பிரிவின் ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பிரிவில் மூன்று பாடசாலைகளுக்கு மஹிந்தோதய தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வுகூடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கல்லூரி முதல்வர் எம்.ரீ.எம்.அஸ்ரப் தலைமையிலும் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் அதன் அதிபர் ஐ.எல்.மஹ்றூப் தலைமையிலும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் அதன் அதிபர் எம்.எல்.ஜூனைத் தலைமையிலும் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் நடைபெற்றன.

8 இலட்சம் ரூபா வீதம் ஒவ்வொரு பாடசாலைக்கும் கல்வி அமைச்சால் மஹிந்தோதய தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன் தெரிவித்தார். 

இந்த நிகழ்வுகளுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.  விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.சுபைர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பாடசாலைகள் வேலைகளின் பரிசோதகர் ஐ.எல்.எம்.றூகுல்லாஹ், பாடசாலைகளின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .