2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலவச குடிநீர் இணைப்புக்காக 380 குடும்பங்களுக்கு காசோலைகள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் இலவச குடிநீர் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவிக்கான காசோலைகள் 380 தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு செவ்வாய்க்கிழமை (29) வழங்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் ஏற்பாட்டில், சவூதி அரேபிய நிறுவனத்தின் உதவியுடன் மேற்படி இலவச குடிநீர் இணைப்புக்கான நிதியுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

இதன்போது, சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 178 குடும்பங்களில்  தலா குடும்பத்திற்கு 3,740 ரூபா பெறுமதியான காசோலைகளும் சமுர்த்தி நிவாரணம் பெறும் 202 குடும்பங்களில்  தலா குடும்பத்திற்கு 5,480 ரூபா பெறுமதியான காசோலைகளும்   வழங்கப்பட்டன.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சவூதி அரேபியாவின் றாபியத்துல் ஆலமி நிறுவனத்தின் தெற்காசிய நாடுகளுக்கான பணிப்பாளர் அஸ்ஸெய்ஹ் அபூசாலிஹ் பின் ஹாலி தாவூத்,  கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  சிப்லி பாறூக்,   காத்தான்குடி நகரசபையின் பிரதி தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 2,000 தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பை பெறுவதற்கான நிதியுதவிகள்  பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X