2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'இளைஞர்கள் 4 ஆம் மாடிக்கு சென்றாலும் த.தே.கூ.விற்கு கவலையில்லை'

Kogilavani   / 2014 மே 02 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் இளைஞர்களையும், தமிழ் மக்களையும் உணர்ச்சி வசப்படுத்தும் வேலைகளையே செய்து வருகின்றனர். தமிழ் இளைஞர்கள் 4ஆம் மாடிக்கு சென்றாலும், அல்லது யார் அழிந்தாலும் பரவாயில்லை என்ற என்னத்துடனேயே இவர்கள் இவ்வாறு பேசித்திரிகின்றனர்' என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வியாழக்கிழமை (1) தெரிவித்தார்.

'ஈழம் பெற்றுத்தருகின்றோம் என தமிழ் இளைஞர்களுக்கு உணர்வை ஏற்படுத்திய தமிழரசுக் கட்சியினர் இன்று அவர்களை கைவிட்டு தூரம்;போயுள்ளனர்' என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மே தினக் கூட்டம் மட்டக்களப்பு படுவான்கரையிலுள்ள மகிழடித்தீவு சந்தியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்

'ஈழம்தான் எமது இறுதி இலக்கு. தனி ஈழம் பெற்றுத்தருவோம் என்றெல்லாம் தமிழ் இளைஞர்களை பேசி அவர்களை உசுப்பேத்தியதன் விளைவுதான் இன்று நான் பேசிக் கொண்டிருக்கின்ற மேடைக்கு முன்னாள் காட்சியளிக்கின்ற மகிழடித்திவு இறால் வளர்ப்பு பன்னையில் வைத்து கொள்ளப்பட்டவர்களின் நினைவுத்தூபியாகும்.

இறால் வளர்ப்பு பன்னையில் தொழிலில் ஈடுபட்ட அந்த தொழிலாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்னாள் எமது கட்சியின் மேதினக் கூட்டம் நடத்தப்படுகின்றது.

பாலங்கள் தேவையில்லை என பேசி அறிக்கை விடுகின்றனர். படுவான்கரை மக்கள்;  கண்ட கனவு இந்த மண்முனைப்பாலமாகும். இந்த பாலம் தேவையில்லை என்று மடத்தனமாக கூறுகின்றனர்.

இந்த பிரதேசத்தில் கர்ப்பிணித்தாய் ஒருவர் தனது பிரசவத்திற்காக செல்லும் போது அவர் மண்முனை வாவியின் துறையிலிருந்து படகுப்பாதைக்கு காத்திருந்துபட்ட துன்பத்தையும், இந்த வாவியில் பயணித்து உயிரிழந்தவர்களையும் ஒரு முறை எண்ணிப்பார்க்க வேண்டும்.

மண்முனைப்பாலம் திறக்கப்பட்டதன் மூலம் இந்த பிரதேச மக்களின் நெல்லுக்கு விலை அதிகரிப்பதுடன்; ஆடு மாடுகளுக்கும் சரியான விலை ஏற்படும். கற்பித்தல் நடவடிக்கைகளும் மேம்படும். இதனால் படுவான்கரையின் கல்வியிலும் மறுமலர்ச்சி ஏற்படும்.

படுவான்கரை என்பது மிக நீண்ட வரலாற்றையும் தமிழ் மக்களின் பாரம்பரிய கலாசாரத்தையும் கொண்டதாகும்.

மண்முனைப்பாலம் திறக்கப்பட்டால் படுவான் கரை தமிழ் மக்களின் கலசார பாரம்பரியம் சீரழிந்து விடும் என்று அறிக்கைவிட்டு பேசினார்கள்.

ஒருபோதும் தமது பாரம்பரியத்தையோ கலாசாரத்தையோ இழக்காத மக்கள் இந்த படுவான்கரை மக்கள். அதற்கு இந்த மக்களின் கடந்தகால
வரலாறுகள் சான்றாக உள்ளன.

பாலங்கள், வீதிகள், அபிவிருத்திகள் தேவையில்லை என்று எந்த ஒரு மனிதனும் சொல்லமாட்டான். நாங்கள் வந்ததால்தான் படுவான் கரை கல்வி வலயத்தை(மட்டக்களப்பு மேற்கு) ஆரம்பித்தோம். ஆதன் மூலம் இந்த பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் கல்வியில் மறு மலர்ச்சி ஏற்பட்டது' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X