2026 மே 04, திங்கட்கிழமை

சித்தாண்டி பெரியதம்பிரான் ஆலய நிர்மாண பணிகளுக்காக 4 இலட்சம் நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2012 மார்ச் 31 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், சுக்ரி, ஜிப்ரான்)


மட்டக்களப்பு சித்தாண்டி பெரியதம்பிரான் ஆலயத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்; 4 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

சித்தாண்டி பெரிய தம்பிரான் ஆலயம் தற்போது புனர்நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் நேற்று ஆவ் ஆலயத்திற்கு விஜயம் செய்த கிழக்கு முதல்வர் ஆலயத்திற்கான சிலைகளை வடிவமைப்பதற்காக குறித்த நிதியை வழங்கியிருந்தார்.

இதேவேளை முதலமைச்சர் கிராம மக்களுடனும் கலந்துரையாடி அவர்களது தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இவ்விஜயத்தின்போது, சித்தாண்டி பிரதேசத்தின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இணைப்பாளர் தியாகராஜா, செயலாளர் சுந்தரலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .