2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

பிரதேச இளைஞர் கழக சம்மேளன உத்தியோகஸ்த்தர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதேச இளைஞர் கழக சம்மேளன உத்தியோகஸ்த்தர்களுக்கான 4 நாள் தலைமைத்துவப் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவுபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்புப் பணிமனை, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் என்பவற்றினுடாக நடாத்தப்பட்ட இப்பயிற்சி முகாமானது கடந்த 30 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வரை இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற புதுக்குடியிருப்புப் பயிற்சி நிலையத்தில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி ஜே.கலாராணியின் வழிகாட்டலில் மாவட்ட சம்மேளனத் தலைவர் தெ.சசிகரன் தலைமையில் இடம்பெற்ற இப் பயிற்சி முகாமில் சுமார் 70பேர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தலைமைத்துவப் பயிற்சிகள், இடம்பெற்றதுடன் நிறைவு நாளன்று தீப்பாசறையுத் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலய மண்டபத்தில் மாவட்ட சம்மேளனத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும்  நிகழ்வில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வவுணதீவு பிரதேச சபை உப தவிசாளர் ஜே.ஜெயராஜ், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராசா, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நி.அருள்மொழி, நிஸ்கோ முகாமையாளர் பி.கிருபைராசா, தகவல் பிரிவு அதிகாரி ரி.மகேந்திரராசா, பயிற்றி நிலையப் பொறுப்பதிகாரி சி.நடேசகுமார் மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .