2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

போரதீவுப்பற்று, 40ஆம் கொலணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிக

Menaka Mookandi   / 2012 ஜூலை 26 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பகுதிகளின் மாணவர்களின் கல்விமேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள கட்டியெழுப்புதல் திட்டத்தின் கீழ் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் நிதியொதுக்கீட்டில் பல்வேறு கல்வி அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட 40ஆம் கொலணி பிரதேசத்தில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இரண்டு மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்டதாக இந்த இரு மாடிக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபையின் வேட்பாளருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபையின் வேட்பாளருமான இராஜன் மயில்வாகனம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மிக நீண்ட நாட்களாக இப்பாடசாலைக்கு கட்டிடத்தேவை குறித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சரிடம் விடுக்கப்பட்டவேண்டுகோளின் அடிப்படையில் இந்த கட்டிடத்துக்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலைக்கு மின் இணைப்பு உட்பட சில உட்கட்டுமானப்பணிகளுக்காக மேலும் ஐந்து இலட்சம் இப்பாடசாலைக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .