2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

காத்தான்குடியில் 431 குடும்பங்களுக்கு குடிநீரைப் பெறுவதற்கான உதவி

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஜிப்ரான்)


மட்டக்களப்பு, காத்தான்குடியில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 431 குடும்பங்களுக்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும்; குடிநீரைப் பெறுவதற்கான உதவிக் கொடுப்பனவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

அத்துடன், இவர்களுக்கு வாழ்வாதார உதவிகளும் தைய்யல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சவூதி அரேபியாவின் மன்னர் மலிக் அப்துல் அஸீஸ், பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க், கலாநிதி சாலிஹ் பின் சாலிம் அல் உஸ்மான், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கமைய ஹிறாபவுண்டேசன் நிறுவனத்தினால் சவூதி அரேபியாவின் மன்னர் மலிக் அப்துல் அஸீஸ், பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் கலாநிதி சாலிஹ் பின் சாலிம் அல் உஸ்மானின் நிதியுதவியுடன் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டன.

இதன்போது, சவூதி அரேபியாவின் மன்னர் மலிக் அப்துல் அஸீஸ், பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் கலாநிதி சாலிஹ் பின் சாலிம் அல் உஸ்மானுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .