2026 மே 04, திங்கட்கிழமை

தொழில்நுட்ப கல்வி வளர்ச்சிக்கு 45 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Kogilavani   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தொழில்நுட்ப கல்வி வளர்ச்சிக்கு 45 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தேசிய தொழில்நுட்பட கல்வி நிறுவகத்தின் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தொழிநுட்பக் கல்வி நிறுவனங்களின் தரங்களைப் பலப்படுத்துவதற்காக 45 மில்லியன் ரூபாவை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

தற்போது அபிவிருத்தியின் தேவை கருதி உல்லாசத்துறை பாடநெறி போன்றவற்றில் புதியவற்றை உருவாக்கவேண்டும்.
புதிய ஹோட்டல் முகாமைத்துவம் போன்ற பாடநெறிகளை தேசிய தொழில்நுட்ப நிறுவகம் எதிர்காலத்திலே வழங்க முன்வர வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .