2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி 5 ஜாமியுள்ளாபிரீன் பள்ளிவாயல் குறுக்கு வீதி திறப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் காத்தான்குடியில் 10இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட காத்தான்குடி 5 ஜாமியுள்ளாபிரீன் பள்ளிவாயல் குறுக்கு வீதி மக்கள் பாவனைக்காக நேற்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், சிறுவர் அபிவிருத்தி மகளீர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு வீதியை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இதேவேளை தலா 10இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள காத்தான்குடி 4 மரைக்கார் உள்ளக பொறுத்துக்கல் வீதி முபாரக் மௌலவி வீதிகளுக்கான வேலைகளும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஸியாட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .