2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 552 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 25 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                           

 (ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்;டத்தில் கடந்த 10 மாதங்களில் 552பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மட்ட்க்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் நேற்று மாலை பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநகர சபை, பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் என்பன இணைந்து இச் சிரமதானத்தை மேற்கொண்டன.

இதன்போது, டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களென அடையாளப்படுத்தப்பட்ட பல இடங்களில் புகை விசுறும் பாரிய நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டன.

பெரும் எண்ணிக்கையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .