2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மீள்குடியேற்றப்பட்ட 80 குடும்பங்களுக்கு மலசலகூடங்கள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பதுளை வீதியை அண்டிய பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டவர்களில் தெரிவுசெய்யப்பட்ட 80 குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் செவ்வாய்க்கிழமை (29) வழங்கப்பட்டன.

அத்துடன், மேற்படி 80 குடும்பங்களுக்கும் மண்வெட்டிகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மலசலகூடங்கள் அமைப்பதற்கான அனுமதிக் கடிதங்களை இக்குடும்பங்களுக்கு வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் தேசபந்து டி.எம்.சந்திரபால, பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் நவவதனி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு மலசலகூடமும் 60,000 ரூபா பெறுமதியில் அமைக்கப்படும் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இதேவேளை, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்றப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களில் தெரிவுசெய்யப்பட்ட  7,714 குடும்பங்களுக்கு மலசலகூட வசதி தேவைப்படுதாக அப்பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். கெங்காதரன் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X