2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 9 மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிகளும் செயலிழப்பு

Super User   / 2013 மார்ச் 21 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிகளும் செயலிழந்துள்ளன என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி, எறாவூர் நகர சபைகள்  மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகியவற்றை தவிர ஏனைய ஒன்பது  உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 17ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இதனால், இந்த உள்ளூராட்சி மன்றங்களினை செயலாளர்கள் பொறுப்பேற்று நடாத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளில் உறுப்பினர்கள் எவரும் தலையிட முடியாது என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் கடந்த 17.3.2012ஆம் திகதியுடன் முடிவடைந்தது. எனினும் மேலும் ஒருவருடத்திற்கு பதவிக்காலம் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் நீடிக்கப்பட்டது.

எனினும், இந்த ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .