2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

மட்டக்களப்பு நகரை அழகுபடுத்த தேவையான நிதியுதவிகளை வழங்கத் தயார்: கோட்டாபய

Super User   / 2012 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                 

                                                                                                    (எம்.சுக்ரி)


மட்டக்களப்பு நகரத்தை அழகுபடுத்துவதற்கு தேவையான அனைத்து நிதியுதிவிகளையும் பெற்றுக்கொடுக்க தான் ஆயத்தமாக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று  தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு நகர அபிவிருத்தி தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இதை தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்துரையாற்றிய கோட்டபய ராஜபக்ஷ, 'மட்டக்களப்பு மாநகரம் அழகாக காட்சியளிக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டம் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாகும். இங்கு அதிகமான சுற்றலா பயணிகள் வருகை தருகின்றார்கள்.
இந்த நகரத்தை சுத்தமாக வைத்திருப்பதுடன் அழகாகவும் வைத்திருக்க வேண்டும்.

இதனால் இங்குள்ள புராதன சின்னங்கள் இடங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். மட்டக்களப்பு மாநகரத்தை எனது அமைச்சின் கீழுள்ள நகர அபிவிருத்தி திணைக்களத்தினுடாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையாள நிதியுதவியை வழங்க தயாராக உள்ளேன். இந்நிலையில் நீங்கள் அதற்கான திட்டத்தினை தந்தால் அதற்கு உதவ தயாராக உள்ளேன்.

எமது அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மிகக் கூடுதலான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் மூலம் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்  நடைபெற்று முடிந்துள்ளன. அதேபோன்று  மேலும் பல அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன.

இங்குள்ள பழைய இடங்களை பாதுகாத்துக்கொள்வது நமது பொறுப்பாகும். எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்தின் மூலம் மட்டக்களப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ஆயத்தமாக உள்ளேன்' என்றார்.

மட்டக்களப்பு மாநகரத்தை அபிவிருத்தி செய்யும்  அபிவிருத்தி தொடர்பான இக்கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த், மஹிந்தானந்த அளுத்கமகே, பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட மாநகர சபையின் பிரதி மேயர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் அரசாங்க அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் மட்டக்களப்பிலுள்ள சிவில் சமூக பிரதி நிதிகள் சமய தலைவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபையினால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன்  மட்டக்களப்பு நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .