2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 31 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், நல்லதம்பி நித்தியானந்தன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகரவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று (31)  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், லஹிரு வீரசேகரவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினர்.

அனைத்துப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகரவுக்கு எதிராக இடம்பெற்று வரும் வழக்கு ஒன்றில்; பிணை வழங்கியபோது, எதிர்ப்பு போராட்டங்களை தவிர்க்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டது.

அண்மையில் இடம்பெற்ற கல்வியை விற்பதற்கு எதிரான  ஆர்ப்பாட்டத்தில் இவர் மேற்படி நிபந்தனையை மீறிக் கலந்துகொண்டபோதே   கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இவர் எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X