2025 மே 08, வியாழக்கிழமை

'அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,ஏ.எஸ்.எம்.முஜாஹித்

நாட்டு நலனுக்காகவும் சமூக,பிரதேச அபிவிருத்திக்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கல்முனை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி பிரசார செயலாளரும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீ கொத்தாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

நீண்ட காலமாக அம்பாறை மாவட்டம் அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கி இருக்கிறது.கூடுதலான இளைஞர், யுவதிகள் வறுமைக் கோட்டில் வாழ்ந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தபடவேண்டும். வீடற்றவர்களை இனங்கண்டு அவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

நீண்ட காலமாக தூர இடங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்பட வேண்டும். வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

ஆகவே, எமது நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி அங்கத்தவர்களும் ஒற்றுமைப்பட்டு மேற்படி பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற முன்வர வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X