2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'அரசாங்கத்துக்குப் பலம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவே மோடிக்கு எதிர்ப்பு'

Princiya Dixci   / 2017 மே 10 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

அரசாங்கத்துக்குப் பலம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவே, ஒன்றிணைந்த எதிரணியினர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பார் வீதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,

“இந்தியப் பிரதமரின் வருகையின் பின்னர், பல நன்மைகள் கிடைக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. அதேபோன்றே, மலையக அரசியல் தலைமைகளும் எதிர்பார்க்கின்றனர்.

“தமிழ் மக்களுக்கு, பிரதமரின் கோரிக்கைக்கு அமைய ஏதாவது இந்த அரசாங்கம் செய்துவிடும், சர்வதேச ரீதியில் அரசாங்கம் பலம்பெற்றுவிடும் என்பதற்காகவே, அவரது வருகைக்கு, ஒன்றிணைந்த எதிரணியினர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

“தமிழ் மக்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழவேண்டும் என்று விரும்பாதவர்களே, இந்த ஒன்றிணைந்த எதிரணியினர் ஆவர்” என, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X