Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஒரு நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்துவதென்பது இஸ்லாத்துக்கு விரோதமான காரியமென தென்னிந்தியாவைச் சேர்;ந்த இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகர் கோவை எஸ்.ஐயூப் தெரிவித்தார்.
காத்தான்குடி தாருல் அதர் அத்த அவிய்யா எனப்படும் அமைப்பு செவ்வாய்க்கிழமை (29) இரவு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஒரு நாடு நன்றாக இருக்கும்போது, அந்த நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு,யாராக இருந்தாலும், அவரவரின் மதங்களை பின்பற்றி சுதந்திரமாக வாழவேண்டுமே தவிர, உள்நாட்டுப் புரட்சியை ஏற்படுத்துவதென்பது இஸ்லாத்துக்கு விரோதமானது.
ஒரு நாட்டில் அரசாங்கம் இருக்கும்போது, அந்த அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு மக்கள் நடக்க வேண்டுமே தவிர, அந்த அரசாங்கத்துக்கு எதிராக குழுக்களாகவோ, இனமாகவோ ஒன்றுகூடி ஆயுதம் ஏந்திப் போராட்டம் நடத்துவது இஸ்லாத்துக்கு விரோதமான காரியமாகும்.
அந்த அடிப்படையில், முஸ்லிம்களானாலும் சரி அல்லது முஸ்லிம் அல்லாதவர்;களாயினும் சரி, இது போன்ற காரியங்களில் யார் ஈடுபட்டாலும் அது இஸ்லாத்துக்கு ஒரு துளி கூட சம்பந்தம் கிடையாதென்பது இஸ்லாத்தின் நடு நிலையான தீர்ப்பாகும். பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்பது மனித சமுதயாத்தின் நிம்மதிக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்து கொண்டு வருகின்றது. பயங்கரவாதத்தை எல்லா சமூகங்களும்; இணைந்து எதிர்க்க வேண்டியது அவசியமாகும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago