Suganthini Ratnam / 2017 ஜனவரி 25 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இந்த நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும் காணித்துண்டு இருக்க வேண்டும். அது அவர்களது உரிமையாகும் எனக் கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் காணி ஆணையளார் டி.டி.அனுர தர்மதாஸ, இன்று (25) தெரிவித்தார்.
அந்தக் காணித்துண்டுக்கு எந்தவொரு சச்சரவும் பிணக்கும் அற்ற உரிமையாளராகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவதிலும் தவறு இல்லை எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியபோது,'அண்மையில்; மட்டக்களப்பு, செங்கலடியில் நடத்தப்பட்ட காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான நடமாடும் சேவையின்போது, பலர் தங்களுக்கு காணிப் பிரச்சினை இருப்பதாகக் கூறி அவற்றைத் தீர்த்துக்கொள்வதற்காக திரண்டிருந்தனர்.
நாட்டில் ஏனைய இடங்களில் காணிப் பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்ட அதேவேளை, இந்த மாகாணத்தில் தொடர்ச்சியாக இருந்துவந்த யுத்த சூழ்நிலை காரணமாக காணிப் பிணக்குகள் நீண்டகாலமாக கிடப்பில் இருந்து வந்ததன் விளைவே, இப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் காணிப் பிணக்குகளுடன் அலைவதற்குக் காரணமாகும்.
பலர் நீண்டகாலமாகத் தாம் வாழ்கின்ற காணிகளில்; உரித்தாவணம் எதுவுமின்றி; வாழ்கின்றார்கள், இன்னும் பலர் தமது பிள்ளைகளுக்கு காணிகளைப் பங்கிட்டுக் கொடுக்க விரும்புகின்றார்கள். இவ்வாறு பல்வேறு வகையான காணிப் பிணக்குகள் இருக்கின்றன.
இன்றைய நல்லாட்சி அரசாங்கம் காணிப் பிணக்குகளைத் தீர்த்து வைத்து மக்களை நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும் என்பதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.
அந்த வகையில் அவர் மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்துக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கி வருவதன் ஒருபடி முன்னேற்றமாகவே காணி இடம்பெயர் சேவைகளை கிழக்கு மாகாணத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.' என்றார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025