Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
'இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பேச்சுவார்த்தையை இடையில் முறித்துவிட்டுச் சென்றார்கள் என்று எமது பக்கம் விரல்களை நீட்டாமல் இருப்பதற்காக உச்சக்கட்ட அர்ப்பணிப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது' என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
கல்லடி வேலுர் ஸ்ரீசத்தி வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (27) மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,
'பேச்சுவார்த்தையை நாம் முறித்துவிட்டோம் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகாமல், எம்மால் முடிந்தவரைக்கும் இந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டேயாக வேண்டும். எல்லாவற்றையும் வெளிநாடுகளின் அழுத்தத்துடன் இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும்' என்றார்.
'அரசியலில் அனுபவம் மிக்கவரும் வழிநடத்தக் கூடியவருமான எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுடன் இணைந்து எமக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முற்பட வேண்டும். எந்த இடத்தில் விட்டுக்கொடுக்க வேண்டும், எந்த இடத்தில் இறுக்கிப் பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியில் செயற்படுகின்றது.
தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி ஒற்றுமையாக வாழ்வதற்காக எங்களுக்குள் விட்டுக்கொடுக்க வேண்டியவற்றை விட்டுக்கொடுத்து, எமக்குள் இணக்கத்தை எடுத்துக்கொண்டு பொதுவான மேசைக்குச் சென்று பேச்சுவார்தை மூலம் நன்மை அடைவதற்கு முயல்கின்றோம்' என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago