Suganthini Ratnam / 2017 மார்ச் 06 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இலங்கைக்கு சர்வதேச சமூகம் மேலும் கால அவகாசம் வழங்காமல், சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை இழுத்தடிப்புச் செய்யாமல் நிறைவேற்றுமாறு பிரயோகிக்க வேண்டும் எனத் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம் மற்றும்; ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்துக்கும் இடையிலான கரம் பெரும் சமர் போட்டி ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்றது. அங்கு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'நல்லாட்சிக்குரிய ஜனாதிபதியும் பிரதமரும் கால இழுத்தடிப்புச் செய்யாமல், போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை வழங்க வேண்டும்.
மக்கள் போராடியே தங்களின் நிலங்களையும் உரிமைகளையும் பெற வேண்டும் என்ற அவசியமில்லை. எமது மக்களின் வாக்குப்பலத்தால் வந்த ஜனாதிபதியும் பிரதமரும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும்' என்றார்.
'தமிழ்ச் சமூகத்துக்கு நீதியான, நியாயமான தீர்வு வேண்டும் என்பதற்காக இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு சர்வதேசம் பொறுப்புக்கூறலுடன் ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றுமாறு 18 மாத கால அவகாசத்தை வழங்கியது. இக்காலப்பகுதியில் ஐ.நா. வின் தீர்மானத்தை இந்த அரசாங்கம் எந்தளவுக்கு நிறைவேற்றியுள்ளது. அரசாங்கத்துக்கு வழங்கிய காலக்கெடு இம்மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த அரசாங்கம் மீண்டும் கால நீடிப்பை சர்வதேசத்திடம் கேட்டு நிற்கின்றது. அதற்கு எங்களால் இணங்க முடியாது.
ஆகவே, கால அவகாசத்தை வழங்காமல், சர்வதேசத்துக்கு இலங்கை அரசாங்கம் கூறிய பொறுப்புக்கூறலை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகின்றோம்.
இந்த நாட்டின் பிரதமர் ஆட்சி அமைத்தபோது, 10 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று கூறினார். ஆனால், அதில் ஒரு சதவீதம் கூட வழங்கப்படவில்லை. இந்த நல்லாட்சியில் கூறப்படும் விடயங்கள் வெறுமனே பேச்சளவில் இல்லாமல், செயற்பாட்டளவில் இருக்க வேண்டும்' என்றார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago