Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
அண்மையில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயாவின் தாயும் தந்தையும் வேலைக்குச் செல்லமுடியாமல் உள்ளது. ஏனெனில் அவர்களுடன் பணிபுரிபவர்கள் உங்களது பிள்ளையை பாதுகாகத் தகுதியற்ற நீங்கள் எப்படி பெற்றோராக இருக்கமுடியும் என குற்றம் சுமத்தியுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
சமுர்த்திப் பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் விற்பனைச் சந்தையை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (28) கொக்குவிலில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
உங்களது வாழ்க்கையின் தரத்தை நீங்களாகவே மாற்றுவதற்கான நிகழ்ச்சித் திட்டமே இந்த சந்தைப்படுத்தல் திட்டமாகும்.
தற்போது சிறுவர்கள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்தல் போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.
உங்களது பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் மீது மிகவும் கரிசணையோடு இருங்கள். உங்கள் தொழிலுக்கு உதவியாக சிறுவர்களை பங்கெடுக்கச் செய்வதன் மூலம் சிறுவர்கள் பொழுது போக்குக்காக வெளியில் சென்று மற்றவர்களுடன் சேர்ந்து குற்றச் செயல்கள் மற்றும் சமூகச் சீரழிவுகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடியும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமுர்த்தி பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உள்ள நிலையில் இங்குள்ளவர்கள் உங்களது உற்பத்திப் பொருட்களை நீங்களே முன்வந்து வாங்க வேண்டும்.
இது உங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago