Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்,எம்.எம்.அஹமட் அனாம்
உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு கரடியனாறில் உள்ள விதை மற்றும் நடுகைப் பொருள் அத்தாட்சிப்படுத்தும் பண்ணையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இதேவேளை, மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
விதை நடுதல், வயல் உழுதுதல், செயற்கைப் பசளை தயாரித்தல் போன்ற செயற்பாடுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் விவாயிகளுக்கான விழிப்புணர்வுட்டும் செயற்திட்டமும் நடைபெற்றது. மேலும் பழ மரக்கன்றுகளும் இதன்போது நடப்பட்டன.
இந்நிகழ்வில்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சதாசிவம் வியாளேந்திரன், அலிஸாஹிர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர்களான என்.இந்திரகுமார், இரா.துரைரட்ணம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago