Suganthini Ratnam / 2017 ஜனவரி 25 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
அரசியலில் பெண்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதுடன், உள்ளூராட்சி அரசியலில் பெண்களுக்கு 50 சதவீதப் பங்கு வழங்கப்பட வேண்டும் என அங்கு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் அகில இலங்கை இணைப்பாளர் மயில்வாகனம் கிருத்திகா தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் இன்று (25) நடைபெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'இலங்கை அரசியலின் உள்ளூராட்சித்துறையில் 1.8 சதவீதமான பெண்களே உள்ளதுடன், அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைந்த நிலையிலேயே இருந்து வருகின்றது.
'தற்போது பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றனர். அரசாங்கத் துறையாக இருக்கலாம், தனியார் துறையாக இருக்கலாம், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், பெண்களால் ஒதுக்கப்பட்ட ஒரு துறையாக அரசியல்துறை காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள அரசியல் நிறுவனங்கள் அனைத்திலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
உள்ளூராட்சி அரசியலில் பெண்களின் பங்கை வலுப்படுத்தும் நோக்கில் நாங்கள் விழிப்புணர்வுப் பிரசார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.
மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என்பதற்காகவும் மக்கள் எவ்வளவு தூரம் இதனை ஆதரிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காகவும் கையெழுத்துகளைப் பெறுகின்றோம்' என்றார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025