Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து அதன் படகுச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், இந்த தீர்மானத்தை கட்சியின் தலைவர் பணிக்குழுவின் அங்கிகாரத்துக்கு விடப்பட்டு அதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
மேலும்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஆயுதம் ஏந்தி தமிழ் மக்களுக்காக போராடிய ஒரு கட்சியாகும். பின்னர் ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்து கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு ஜனநாயக ரீதியாக பாடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இறுதி வரை குரல் கொடுக்கும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது கலைக்கப்பட்டு எந்தவொரு பேரினவாதக் கட்சிகளுடனும் சங்கமிக்காது. இது கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் விடிவுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago