Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசியல் அமைப்பின் மூலம் எமக்குரிய அதிகாரங்கள் பூரணமாக வழங்கப்பட்டு எங்களை நாங்களே ஆளக்கூடிய வடகிழக்கு இணைந்த சுயாட்சி உருவாகுமேயாக இருந்தால் மாத்திரமே நாங்கள் நினைத்ததை எமது பிரதேசத்தை குறிப்பாக கல்வித் திணைக்களத்தினால் குறிப்பாக பின்தள்ளப்பட்ட பிரதேசம் கஷ்ரப்பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இப்படியான பிரதேசங்களை அபிவிருத்தி செய்யக்கூடியதாக இருக்கும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
கணேசபுரம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி அதிபர் எஸ்.புஸ்பராசா தலைமையில் வியாழக்கிழமை (2) மாலை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'எமது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட கூறியுள்ளர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு எந்தவொரு சட்டத்தையும் எந்தவொரு அரசியல் அமைப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளார். அண்மையில் ஜனாதிபதியின் மட்டு. விஜயத்தின்போது சம்பந்தன் ஐயா ஒரு முக்கிய செய்தியை கூறியிருந்தார் இந்த நாட்டில் அமைதி பேணப்பட வேண்டும் நீண்ட நெடுங்காலமாக புரையோடிப்போய்யுள்ள இந்த இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு வரவேண்டு;மாக இருந்தால், முன்னாள் ஜனாதிபதியும் அவருடன் சேர்ந்தவர்களும் இந்த நாட்டை குழப்பாமல் ஒரு அமைதி ஏற்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago